சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பென்னக்கோணம் கிழக்கு தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ்(23) என்ற மகன் உள்ளார். கூலித் தொழிலாளியான வெங்கடேஷ் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இதனை அடுத்து வெங்கடேஷ் சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த குழந்தைகள் நல குழு உறுப்பினர் ராமு என்பவர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் வெங்கடேஷை கைது செய்தனர். மேலும் குழந்தை திருமணம் நடந்தால் சைல்ட் லைன் 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவர்களின் விவரம் பாதுகாக்கப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.