தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் பள்ளி மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு மாணவர்களுக்கான கால அட்டவணையும் வெளியாகியது.
இதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் 30ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களின் விபரங்கள் தொடர்பான திருத்தங்கள் செய்ய இன்று (மார்ச் 12) கடைசி நாளாகும். இதனால் தேர்வுத்துறையின் இணையதளத்தை பயன்படுத்தி உரிய திருத்தங்களை மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.