இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சிறப்பு கடன் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கடனை பெறுவதற்கு வங்கிக் கிளைக்கு அலைய தேவையில்லை. ஆன்லைன் மூலமாக உடனே கடனைப் பெற்றுக் கொள்ளலாம். வாரம் 7 நாளும் 24 மணி நேரமும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் வலைத்தளத்தின் மூலம் இந்த கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த உடனடி கடன் வசதி மூலம் 8 லட்சம் வரை பர்சனல் லோன் மற்றும் தொழில் கடன் ஆகியவைகளை பெறமுடியும். பஞ்சாப் நேஷனல் வங்கியின் pnbindia.in என்ற இணையத்தளத்தில் லாகின் செய்து பர்சனல் லோன் மற்றும் தொழில் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆதார் நம்பர், மொபைல் நம்பர் மற்றும் பான் கார்டு போன்ற ஆவணங்கள் தேவை. வாடிக்கையாளர்களுக்கான கடன் தகுதி வங்கி தரப்பில் சரிபார்க்கப்பட்ட பிறகு கடன் வழங்கப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.