Categories
தேசிய செய்திகள்

உடனே முந்துங்கள்… இல்ல விற்று தீர்ந்து போயிடும்…. படுஜோர்…!!!

நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 60,000 ஓலா வின் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டதாக நிறுவன தலைமை செயல் அதிகாரி பவிஸ் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார். நான்கு நொடிகளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஓலா மின் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஸ்கூட்டர் ஒன்றுக்கு ரூ. 499 செலுத்தி முன்பதிவு செய்து பின்னர், முன்பணமாக தலா 20 ஆயிரம் செலுத்தவேண்டும்.

முன்பதிவு செய்வதற்கான கடைசி நாள் இன்று ஆகும்.  இன்று நள்ளிரவுக்குள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்பதால் ஏராளமான மக்கள் அவசர அவசரமாக தற்போது முன்பதிவு செய்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 600 கோடி மதிப்புக்கு மின்சார ஸ்கூட்டர்கள் விற்று தீர்ந்துள்ளது. இதனை ஓலா செயலி மூலமாக மட்டுமே முன்பதிவு செய்து, மின்சார ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |