நடிகை மீரா மிதுன் பட்டியல் இன மக்களை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார். இதை பார்த்த பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அவரை கைது செய்யவும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து மீராமிதுன் தன்னை கைது செய்து பார்க்கும்படி காவல்துறையினருக்கு சவால் விட்டதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மீராவையும், அவருடைய காதலன் அபிஷேக்கையும் கைது செய்துள்ளனர். இந்நிலையில் நடிகை மீரா மிதுன் யூ-டியூப் சேனலை முடக்க யூ-டியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றபிரிவு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். ஜாதியை பற்றி பேசி வன்முறை தூண்டும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டதால், யூ- டியூப் சேனலை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.