Categories
சினிமா தமிழ் சினிமா

“உடம்புக்கு நல்லதல்ல” ஒரேடியா 23 கிலோவா…..? நடிகர் சிம்புவுக்கு ரசிகர்கள் அட்வைஸ்….!!!!

பிரபல நடிகர் 23 கிலோ வரை உடல் எடையை குறைத்துக் கொண்டு நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநகரம் திரைப்படம் 100 கோடி வரை வசூல் சாதனை செய்து மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பிறகு கௌதமேனன், சிம்பு கூட்டணியில் உருவாகும் 3-வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், நேற்று இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் உலகநாயகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.

இந்நிலையில் தன்னுடைய உடல் எடையை குறைத்துக் கொண்டு மாநாடு படத்தில் நடித்த சிம்பு, வெந்து தணிந்தது திரைப்படத்திற்காக 23 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். இந்த தகவலை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வெளியிட்டுள்ளார். மேலும் உடல் எடையை குறைத்த சிம்புவிற்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் வந்தாலும், 23 கிலோ வரை உடல் எடையை குறைப்பது உடம்பிற்கு நல்லதல்ல எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Categories

Tech |