நெல்லை மாவட்டத்தில் காவல்துறையினர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா தொற்று பல உயிர்களை பறித்த நிலையில் அரசாங்கம் அயராது பாடுபட்டு பல முயற்சிகளை மேற்கொண்டு தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் மீண்டும் உருவெடுத்த கொரோனா பாரபட்சமின்றி அனைத்து மனித உயிர்களை பழிவாங்க ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் குமரி மாவட்டம் பத்துக்காணியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் உவரியில் உள்ள காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவருக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டதையடுத்து நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து மருத்துவமனையில் அவருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. அதில் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து தொடர் சிகிச்சையில் இருந்த விஜயகுமார் திடீரென சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.