வெங்காய ரசம் செய்ய தேவையான பொருள்கள்:
வெங்காயம் – 4 (நீளமாக நறுக்கியது)
புளிக்கரைசல் – 1 தம்ளர்
துவரம்பருப்பு – கால் கப் (வேக வைத்தது)
தக்காளி – 1 (பொடித்தது)
மிளகு – 1 டீஸ்பூன்
பூண்டு – 3 (தோல் உரித்தது)
சீரகம் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 1 சிட்டிகை
கொத்தமல்லி தழை – சிறிது
கருவேப்பிலை – சிறிது
எண்ணெய் – சிறிது
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
செய்முறை:
மிக்ஸியில் மிளகு, சீரகம், பச்சை மிளகாய் மற்றும் பூண்டினை நன்கு அரைத்து கொள்ளவும்.
புளி, உப்பு மற்றும் பெருங்காயத்தை சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கியதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, சின்ன வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பின் தக்காளியை போடவும் வதக்கவும்.
மிக்ஸி ஜாரை எடுத்து அதில் ஏற்கனவே அரைத்து வைத்த கலவை, புளித் தண்ணீர், தாளித்து வதக்கிய கலவையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் மசித்த துவரம் பருப்பு, அரைத்த கலவையை சேர்த்து கொதிக்க ஆரம்பமாகும் போது இறக்கவும். ரசத்தை இறக்கிய பின்பு கொத்தமல்லி தழையை தூவினால் மணமான ,ருசியான வெங்காய ரசம் ரெடி.