Categories
அரசியல்

உடம்பு சரியில்லையா…! எதிர் வீட்டுக்குள் நுழைந்து…. நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்…!!!

ஸ்டாலின் முதல்வரின் மகனாக இருந்த பொழுதும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் எப்பொழுதும் மக்களை அவர்கள் இடத்திற்கு சென்று சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். தற்பொழுது முதல்வராக பொறுப்பேற்ற பிறகும் கூட அவர் நடை பயிற்சியின் போதும், சைக்கிளில் செல்லும் போதும், சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது மக்களை சந்திப்பதற்காகவே நேரம் ஒதுக்கி சந்தித்து வருகிறார். இந்நிலையில் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

இங்கு அவர் 10 ஆண்டுகளுக்கு மேல் அடிக்கடி அங்கு சென்று வந்து வருகிறார். இந்த வகையில் ஸ்டாலின் எம்எல்ஏ அலுவலகத்திற்கு எதிராக அமைந்துள்ள சிவராமகிருஷ்ணன் குடும்பத்துடன் நட்பு பாராட்டி வருகிறார்.  இந்த நிலையில் நேற்று சிண்டிகேட் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிவராமகிருஷ்ணன் மனைவியின் அம்மாவிற்கு உடல் நலம் பாதிக்கப் பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்த ஸ்டாலின் உடனே எதிரே உள்ள அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதனால் சிவராமகிருஷ்ணன் குடும்பத்தினர் முதல்வர் தங்கள் வீட்டுக்குள் வந்ததுள்ளதை பார்த்து மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பாட்டிக்கு நம்பிக்கையூட்டி அவரைத் தேற்றினார். இதன் பின்னர் அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடி விட்டு, பின்னர் அங்கிருந்து புறப்பட்டார். இந்த எதிர்பாராத நிகழ்வினால் சிவராமகிருஷ்ணன் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |