அரசு பள்ளிகளில் உடற்கல்வியை ஊக்குவிக்க முதற்கட்டமாக 18.94 கோடி நிதியை பள்ளிகல்வித்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக அரசால் பல்வேறு நிதி உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றது. மவ்லும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும் நிதி உதவிகள் அளிக்கப்படுகின்றது. இதன் மூலம் ஏராளமான மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஊக்குவிக்க முதற்கட்டமாக 18.94 கோடி நிதியை பள்ளிகல்வித்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.
அதன்படி மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா ரூபாய் 25 ஆயிரம், தொடக்கப்பள்ளிகளுக்கு தலா ரூ.5,000, நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.10,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி பள்ளிகளின் விளையாட்டு உட்கட்டமைப்புக்கு ஏற்றவாறு தரமான உபகரணங்களை வாங்க அறிவுறுத்தியுள்ளது.