Categories
தேசிய செய்திகள்

உடற்கல்வி ஆசிரியரின் மனைவி செய்த செயல்….பெரும் சோகச் சம்பவம்….!!!!

மண்டியா மாவட்டம் டவுன் கெம்பேகவுடா படாவனேயில் உள்ள காலனியில் வசித்து வருபவர் ரவிச்சந்தர். இவர் மைசூருவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவிதா (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகளாகிறது. மேலும் 7 வயதில் ஒரு மகனும்,ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் திருமணமான புதிதில் ரவிச்சந்தர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்த்து, அங்கேயே  குடும்பத்துடன் வசித்தும் வந்துள்ளார்.

இதன் பின், கடந்த 3 மாதங்களுக்கு முன், அவருக்கு மைசூருவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேலை கிடைத்துள்ளது. இதனால் அவர் குடும்பத்துடன் மண்டியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார். மேலும் அங்கு வாடகை வீடு ஒன்று எடுத்து குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு, இவர்களது பெண் குழந்தையின்  முதலாவது பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் வீட்டில் கவிதாவும், அவரது ஒரு வயது மகளும் தனியாக இருந்த நிலையில், சுமார் 3 மணி நேரமாக குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது.

எனவே குழந்தை நீண்ட நேரமாக அழுவதை அக்கம்பக்கத்தினர் கண்டு, உடனடியாக கவிதாவின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு கவிதா தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில், அவரது காலடியில் குழந்தை அம்மா, அம்மா என்று கதறி, அழுது கொண்டிருந்தது. இதையடுத்து ,இதுபற்றி ரவிச்சந்திருக்கும், மண்டியா டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனே தகவல் அறிந்து  மண்டியா டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கவிதாவின் உடலை கைப்பற்றினர். மேலும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்றையும் வீட்டில் இருந்து கைப்பற்றியுள்ளனர். இதற்கிடையே  ரவிச்சந்தர் வீட்டிற்கு வந்து, தனது மனைவியின் உடலைப் பார்த்து கதறி அழுதார். அதன் பின் கவிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து , இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |