Categories
தேசிய செய்திகள்

உடற்பயிற்சியில் சவால்…. வெற்றியடைந்தால் ரூ.10 லட்சம்…. ஊழியர்களுக்கு வேற லெவல் அறிவிப்பு….!!!!

பெங்களூருவை சேர்ந்த நிதிச்சேவை நிறுவனமான செரோதா(Zerodha) தன் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இந்த நிறுவனத்தின் சிஇஓ நிதின் காமத் அண்மையில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் உடற்பயிற்சியின் வாயிலாக உடல் நலனை சரியான அளவில் பேணும் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுதொகையை அறிவித்து இருக்கிறார். கொரோனா பேரிடர்போது பல்வேறு நிறுவனத்தின் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி வேலை செய்ய துவங்கினர். வீட்டிலிருந்தே பணிபுரிந்ததில் ஊழியர்களுக்கு உடல் ஆரோக்கியத்தின் மேலுள்ள கவனம் குறைத்து இருப்பதாக சிஇஓ நிதின் காமத் தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் உடல் நலன் குறித்து செரோதா நிறுவனம் அளித்துள்ள சவால்களைச் சரியாக பின்பற்றும் நிறுவன ஊழியர்களுக்குப் பெரியளவில் ஊக்கத்தொகையும், அவற்றில் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு 10 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும் என்று சிஇஓ நிதின் காமத் அறிவித்து இருக்கிறார். இந்த சவால் பற்றி நிதின் காமத் தன் டுவிட்டர் பக்கத்தில் “நாளொன்றுக்கு குறைந்தது 350 கலோரிகளை குறைப்பதுதான் சவால் எனவும் இந்த இலக்கு மாறுபடலாம் எனவும் தெரிவித்து உள்ளார்.

நிறுவனத்தின் பிட்னஸ் டிராக்கர்களில் தினமும் இதற்குரிய இலக்குகள் அமைக்கப்படும் எனவும் இந்த இலக்கில் 90 % நிர்ணயிக்கப்பட்ட நாட்களில் அடையும் ஊழியர்கள் அனைவரும் தங்களது ஒருமாத சம்பளத்தை போனஸாக பெறுவார்கள் எனவும் தெரிவித்து இருக்கிறார். அத்துடன் இந்த சவாலில் வெற்றிஅடைபவர்களுக்கு குலுக்கல் போட்டி நடைபெறும். அவற்றில் வெற்றியடையும் அதிர்ஷ்டசாலிக்கு ரூபாய்.10 லட்சம் வழங்கப்படும் என்று நிதின் காமத் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக நிதின் காமத் கூறியதாவது “ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிந்ததில் உடல் ஆரோக்கியத்தின் மேலுள்ள கவனம் குறைத்துள்ளது. இதன் காரணமாக இந்த புதுவித செயல்கள் ஊழியர்களை உடல்பயிற்சி செய்யத் தூண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |