Categories
தேசிய செய்திகள்

உடற்பருமன் கொண்டவர்களே கொரோனாவிற்கு பலி… ஆய்வில் வெளியான தகவல்..!!

உடற்பருமன் கொண்டவர்களே கொரோனாவிற்கு பலியாவதாக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல மாநிலங்களில் படுக்கை வசதி, ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்ற காரணத்தினால் பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இதையடுத்து இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது.

அதில் கொரோனாவிற்கு அதிகம் பலியானவர்கள் உடற்பருமன் கொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினர் 20 ஆயிரம் பேருடன் நடத்திய ஆய்வில் அவர்களில் அதிகம் பேருக்கு உடல் பருமன் பிரச்சனை உள்ளது. குறிப்பாக 20 முதல் 39 வயது உடையவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

Categories

Tech |