Categories
லைப் ஸ்டைல்

உடலில் ஆக்ஸிஜன் அளவு சீராக…. நீங்க குடிக்கிற டீல இத ஒரு ஸ்பூன் சேர்த்துக்கோங்க….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் உடலில் ஆக்சிஜன் அளவு சீராக எளிய இயற்கை மருத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஓமம்- 100 கிராம்
சோம்பு- 50 கிராம்
கிராம்பு- 5 கிராம்
பட்டை- 5 கிராம்
சுக்கு- 10 கிராம்
ஏலக்காய்- 10 கிராம்

இவைகளை எண்ணெய் ஊற்றாமல் லேசாக வறுத்து பொடி செய்து ஒரு பாட்டிலில் அடைத்து கொண்டு காலை மாலை டீ போடும் போது இரண்டு பேருக்கு ஒரு ஸ்பூன் வீதம் கலந்து சாப்பிட்டால் டீ, மசாலா டீ ஆக மாறும். நமக்குத் தேவையான ஆக்சிஜன் அபரிமிதமாகக் கிடைக்கும். இதனை தினமும் தொடர்ந்து குடிப்பது மிகவும் நல்லது. இப்போது இருக்கும் கொரோனா சூழலில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, எனவே டீயில் இந்த பொடியை சேர்த்து அனைவரும் குடித்து வாருங்கள்.

Categories

Tech |