Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலில் கெட்ட கொழுப்பை குறைக்க… இந்த உணவுகளை பயன்படுத்துங்க…!!!

மனிதர்கள் வயதாகும் போது அவர்களின் வயிற்றைச் சுற்றிலும் தொப்பை  வருவதால் பல நோய்கள் வர காரணமாகிறது. அதனால் ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் கொழுப்பு சார்ந்த உணவுகளை உட்கொள்வதாலும் கொலஸ்ட்ரால் அதிகரித்து தொப்பை வருகிறது. இத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால் பல நோய்கள் வர காரணமாயிருக்கிறது.

மேலும் சிலர் ஆரோக்கியமற்ற உணவுகள் என்று தெரிந்தாலும்  இப்போது வரைக்கும் அதனை அப்படியே சாப்பிட்டு பின்னர் குண்டாகிவிட்டேனே  என்று மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஏற்படும் கெட்ட கொழுப்பை கரைப்பதோடு மட்டுமல்லாமல்  தொப்பை குறைப்பதை மிக எளிதாக பின்பற்றலாம்.

இதற்கு முதலில்  ஜங்க் புட்களை தவிர்ப்பதாலும், நாள் தோறும் உடற்பயிற்சி செய்து வந்தால் தான் அதிகப்படியான உடல் எடை குறைப்பதோடு, தொப்பையை எளிதில் குறைத்து கொள்ளலாம்.

உடற்பயிற்சி செய்வதால் ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் செயல்படாமல் உடல் முழுவதுமே இயக்கப்படுவதால், எளிதில்  உடல் எடையுடன், தொப்பை குறைக்க முடியும்.

இந்த உடற்பயிச்சி செய்ய பெல்லி டயட்டை பின்பற்ற  கீழே சில வகை வழிமுறைகளை இந்த செய்தி தொகுப்பில் தொகுத்துள்ளோம்.  இதை பின்பற்றினால் , எளிதில்  உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் குறைக்க முடியும்.

தண்ணீர்:

ஒரு நாளைக்கு  குறைந்தளவு  78 டம்ளர் தண்ணீர் குடித்து வந்தால், உடல் சோர்வு இல்லாமல் இருப்பதோடு, உடம்பில் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேறிவிடும். மேலும் சீரான அளவு தண்ணீர் குடித்து வந்தால், உடலின் உள்ள  மெட்டபாலிசத்தை  அதிகரிக்க செய்யும். இதனால் வயிற்றை சுற்றி இருக்கும் கொலஸ்ட்ராலை  குறைந்து விடும்.

உப்பு:

உணவில் உப்பின்  அளவை குறைப்பதன் மூலம், உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க முடியும் ஏனெனில் உப்பை அதிகம் சேர்ப்பதால்  உடம்பில் உள்ள  தண்ணீரானது கழிவுகளாக வெளியேறாமல், அப்படியே தங்கிவிடுவதால் சிறுநீரக கோளாறு, குடல்வால்வு போன்ற நோய்கள் வர காரணமாகிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்வதை  தவிர்ப்பது நல்லது.

தேன்:

சர்க்கரையானது வயிற்றைச் சுற்றி தொப்பையை உருவாகுவதற்கு, ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைப்பதோடு, உடல் எடையையும் குறையும்.

நட்ஸ்:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நட்ஸ், பாதாம்பருப்பு  சாப்பிடுவதால் கொழுப்பு படிந்துவிடும் என்று, உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் சாப்பிட கூடாது என நினைப்பது தவறான கருத்தாகும். ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க செய்வது  மிகவும் அவசியம். அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸ்களில் நிறைந்துள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.

அவகேடோ:

அவகேடோவில்  உடலுக்கு தேவையான  கொழுப்பானது அதிகம் காணப்படுகிறது. மேலும் இதை  சாப்பிடுவதால் இதில் உள்ள ஊட்டச்சத்தானது, வயிற்றை நிறப்பி, அடிக்கடி பசியை  தூண்டுவதை  தடுக்கிறது. அதனால் அவகாடோவை  உடற்பயிற்சி செய்யும் நேரத்தில் சாப்பிடுவது மிகவும் நல்லது.

Categories

Tech |