செம்பருத்தி, உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதுடன், ரத்தத்தில் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்பை முற்றிலும் விரட்டி அடிக்கும்.
அன்றாட உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொண்டால், உடல் சோர்வு நீங்கி விடும். செம்பருத்தி பூவின், காய்ந்த இதழ்களை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, டீயாக அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் சீராகஅமையும்.
உடலை குளிர்ச்சியாக்க சிறந்த ஒன்று. சருமத்தை பளபளப்பாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
செம்பருத்தி டீ செய்ய தேவையான பொருட்கள்:
செம்பருத்தி இதழ் – 7 இதழ் (காய்ந்தது )
தண்ணீர் – 1 1/2 கப்
நாட்டு சர்க்கரை அல்லது தேன் – 2 ஸ்பூன்
முதலாவதாக, ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். பின் தண்ணீர் கொதித்ததும், அதில் 7 காய்ந்த செம்பருத்தி இதழ்கலை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
அதன்பின் வடிக்கட்டி, 2 ஸ்பூன் நாட்டு சர்க்கரை அல்லது தேன் கலந்து குடிக்கவும். இதனை ஒரு நாளைக்கு 3 தடவை குடிக்கலாம். அதுவும் காலை உணவுக்கு பின் குடித்தால் உடம்பிற்கு மிகவும் நல்லது.