நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கு முட்டைக்கோஸ் மிகவும் உதவுவதால் அதனை இவ்வாறு பயன்படுத்துங்கள்.
நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் உட்கொள்ளும் உணவுகளில் மிகவும் சத்து நிறைந்த காய்கறிகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். அது நமது உடல் ஆரோக்கியத்திற்கு பலம் சேர்க்கும். அவ்வாறு நாம் அருந்தும் காய்கறிகளில் முட்டைக்கோஸ் உடலை சுத்தப்படுத்த உதவுகிறது. அது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தப்படுத்துதல், வயிற்றுப்புண், அலர்ஜிகளை குணப்படுத்துதல், எடை குறைதல் என பல்வேறு நன்மைகளை செய்யும் சத்துக்கள் நிறைந்துள்ளது.
அதனை சமைத்து சாப்பிடுவதை விட ஜூஸ் செய்து குடித்தால், அதன் சிறந்த பலன்களை பெறலாம். நீரில் முட்டைகோஸ் இலைகளை போட்டு நன்கு கொதிக்க வைத்து, அவை மென்மையாக மாறிய பிறகு பிளேண்டரில் இட்டு ஜூஸாக அரைக்கலாம். அதன் பிறகு அதை வடிகட்டி அந்த சாருடன் வெள்ளரி, ஆப்பிள், ஸ்பினாச் அல்லது வேறு பழங்கள் போட்டு அருந்துவது மிகவும் நல்லது.