புளிச்ச கீரையின் நன்மைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :
புற்றுநோய் :
உடலில் செல்களில் ஏற்படும் சில மாற்றங்களால் புற்று நோய் ஏற்படுகிறது. பல வகையான புற்று நோய்கள் இன்று மனித குலத்தை பயமுறுத்துகின்றன. புற்று நோய் மனிதர்களின் உடலின் பல பாகங்களை பாதிக்கிறது. புளிச்ச கீரையை அதிகளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலின் செல்கள் வலுப்பெற்று, புற்று செல்களின் வளர்ச்சியை தடுத்து, புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்களை குறைகிறது.
வயிற்று புண்கள் :
காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரங்கடந்து சாப்பிடுவதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது. இது உணவை செரிமாணம் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. புளிச்ச கீரையை குழம்பு, கூட்டு போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது. மலக்கட்டை இளக செய்து மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது.
புளிச்ச கீரை துவையல் செய்ய தேவையான பொருள்கள் :
பச்சை மிளகாய் – 3 அல்லது 4
வெந்தயம் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
பூண்டு – 8 பல்
காய்ந்த மிளகாய் – 10
முழு தனியா – 1 /2 கரண்டி
எண்ணெய் – தேவைக்கேற்ப
காய்ந்த மிளகாய் – 6
பூண்டு – 6 பல்
முதலில் கீரையை இலைகளை மட்டும் ஆய்ந்து சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். மேற் சொன்ன மற்ற தேவையானவற்றையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கீரையை தவிர மற்ற பொருட்களை போட்டு வதக்கி கொள்ளவும்.
வதங்கியதும் எடுத்து ஆற வைக்கவும்.அதே கடாயில் அலசி வைத்துள்ள கீரையை போட்டு நன்கு வதக்கவும். வதங்கிய கீரையை எடுத்து ஆற வைக்கவும்.பின்னர் இப்போது முதலில் வதக்கி ஆற வைத்துள்ள மிளகாய் மற்றும் மற்ற பொருட்களை மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும்.
அதனுடன் வதக்கி ஆற வைத்துள்ள கீரையை சேர்த்து தேவையான உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும்.அரைத்து வைத்துள்ள கீரை மற்றும் மிளகாய் விழுதை ஒரு கடாயில் போட்டு நன்கு வதக்கவும்.
இதற்கு எண்ணெய் கொஞ்சம் தாராளமாக விடலாம். அரைத்த விழுது வதங்கி எண்ணெய் மேலே மிதக்கும் வரை நன்கு வதக்கவும்.வேண்டுமென்றால் சிறிது காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டினை எண்ணெயில் வதக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் இதனை துவையலுடன் சேர்க்கவும். இவை கீரையில் ஊறி சாப்பிடும் போது நன்றாக இருக்கும். சுவையான புளிச்ச கீரை துவையல் தயார். இந்த துவையல் 10 – 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.