வல்லாரை கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. வல்லாரை கீரை ஞாபக சக்தியை அதிகரிக்கும் என்று நமக்கு தெரியும். இத்தகைய கீரையை கொண்டு செய்யப்படும் ஈஸியான ரெசிபிகள் குறித்து நாம் இங்கு காண்போம்.
வல்லாரை கீரை துவையல்
தேவையான பொருட்கள்:
வல்லாரைக் கீரை – ஒரு கட்டு,
சின்ன வெங்காயம் – 10,
கடலை பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 1,
மிளகு – அரை டீஸ்பூன்,
தேங்காய் – ஒரு துண்டு,
தக்காளி – 2,
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு அது காய்ந்ததும் கடலை பருப்பு, மிளகு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு சுத்தம் செய்த வல்லாரைக் கீரை இலைகளை எடுத்து அத்துடன் சேர்த்து வதக்கவும். கீரை வதங்கியதும் அதனுடன் தேங்காய் துண்டுகள், உப்பு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். சத்து நிறைந்த வல்லாரைக் கீரை துவையல் ரெடி!
வல்லாரை கீரை பொரியல்
தேவையான பொருட்கள்
வல்லாரை கீரை : 1 கட்டு,
சிறிய வெங்காயம் : 2 கப்,
மிளகாய் : 3 கப்,
கடுகு – 1 ஸ்பூன்,
உளுந்து – 1 ஸ்பூன்,
கடலை பருப்பு – 1 ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கீரையை நன்றாக கழுவி இலைகளையும், சிறு தண்டுகளையும் பறித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு, ஊளுந்து, கடலை பருப்பு பொட்டு தாளித்து கொள்ளவும். பிறகு வெங்காயம், மிளகாய் பொட்டு வதக்கவும். இப்பொழுது கீரையை தண்ணீரிலிருந்து எடுத்து வாணலியில் போட்டு நன்கு வேக விடவும். சிறிது நேரம் கழித்து உப்பு போட்டு கிளரி தேங்காய் துறுவல் தூவி இறக்கி வைக்கவும். இப்பொழுது ஆரோக்கியமான கீரை பொரியல் தயார்.
வல்லாரை கீரை தோசை
வல்லாரை கீரை – 1 கப்,
பச்சை மிளகாய் – 1,
தோசை மாவு – 1 கப்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
முதலில் வல்லாரை கீரையை நன்கு கழுவி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். இதனுடன் பச்சை மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். தோசை மாவில் அரைத்த கீரையை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த மாவை தோசையாக ஊற்றி எண்ணெய் ஊற்றி எடுத்தால் ஆரோக்கியமான வல்லாரை கீரை தோசை ரெடி. வல்லாரைக் கீரையை பொரியல் செய்து சாப்பிட பிடிக்காதவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த தோசையை செய்து சாப்பிடலாம்.