வெங்காயத்தாள் பொரியல் செய்ய தேவையான பொருள்கள் :
சின்ன வெங்காயம் – 1கப்
வெங்காய தாள் – 1 கப்
தேங்காய் துருவல் – 5 ஸ்பூன்
கொத்தமல்லி – தேவையான அளவு
கறிவேப்பலை – தேவையான அளவு
எண்ணெய் – 3 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 5
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் சின்ன வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி தழை, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, ப.மிளகாய், கறிவேப்பலை போட்டு தாளித்த பின் சின்ன வெங்காயம் போட்டு சிறிது வதக்கவும்
அடுத்து வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் வெங்காய தாள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயத்ததாள் விரைவில் வெந்து விடும்.
பிறகு ஐந்து நிமிடங்களுக்கு, பிறகு தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.சுவையான சத்தான வெங்காயத்தாள் பொரியல் ரெடி.