Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலுக்கு தேவையான சத்துக்களை அள்ளித்தரும்… முளைகட்டிய தானியங்கள்… கட்டாயம் சாப்பிடுங்க..!!

முளைக்கட்டிய தானியங்கள் அதிக ஊட்டச்சத்து புரோட்டின் நிறைந்த ஒரு இயற்கை உணவு. பருப்புகள், விதைகள், தானியங்கள் மற்றும் அவரை வகைகளை முளைகட்டி பயன்படுத்தலாம். அப்படி நாம் செய்யும் போது புரோட்டீன், வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து தன்மை அதிகரிக்கும். ஜீரண பிரச்சனைகளை உண்டாக்கும் ஆன்ட்டி நியூட்ரியன்ட்ஸ் பொருள்களை குறைக்கச் செய்கின்றது. கடலை வகையான பாதாம் போன்றவற்றை முளை கட்டுவதன் மூலம் அவற்றில் ஒளிந்திருக்கும்.

ஏராளமான சத்துக்கள் வெளியில் வரும். பாதாம் பருப்பை முளைக்கட்டும் போது லிப்பெஸ் மற்றும் ஜீரணத்திற்கு உதவி புரியும். கொள்ளு, முள்ளங்கி விதை, பிரக்கோலி மற்றும் சோயா போன்றவர்களை முளைகட்டும் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இவற்றில் உள்ள அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் வயது முதிர்ச்சியை குறைக்க செய்யும். முளை கட்டிய தானியங்கள் எளிதாக கிடைக்கக்கூடிய விலை குறைவான பொருளாகும்.

பச்சை பயறு, கடலைப் பருப்பு, கொண்டைக்கடலை, அவரை விதை, காய்ந்த பட்டாணி போன்றவை நம் நாடு முழுவதிலும் எளிதாக கிடைக்கின்றன. அவற்றை நாம் மூளைக்கட்டி சாப்பிடும் போது பல நன்மைகள் நம் உடலுக்கு வந்து சேர்கின்றது. இவை அனைத்திலும் முளை கட்டிய குதிரைகொள்ளு அதிகமான பலன்களைக் கொடுக்கிறது. இதில் மாங்கனீஸ் வைட்டமின் ஏ, பி, சி, டி, ஈ, கே மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது.

Categories

Tech |