பீகாரைச் சேர்ந்த பிருத்வி ராஜ் சிங், தன் மனைவியுடன் பெங்களூரில் வசித்து வந்திருக்கிறார். இருவருக்குள்ளும் அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிருத்வி ராஜின் மனைவி அவருடன் உடலுறவுகொள்ள மறுப்பு தெரிவித்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிருத்வி, தன் மனைவியை ஆகஸ்ட் 3-ம் தேதி காரில் அழைத்து சென்று பின்னர் தன் நண்பர் ஒருவருடன் சேர்ந்து கொலைசெய்துவிட்டு, ஷீரடி காட் பகுதியில் உடலை வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்.
பிறகு அவரே, தன் மனைவி காணாமல்போய்விட்டதாக போலீஸில் புகாரளித்திருக்கிறார். இதில் சந்தேகமடைந்த போலீஸார், அவரை கைதுசெய்து விசாரித்தனர். விசாரணையில், எங்களின் திருமணத்தின்போது அவளுக்கு 28 வயது என்றுதான் சொன்னார்கள். பின்னர்தான் அவள் என்னைவிட 10 வயது பெரியவள் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். அவள் ஒருபோதும் உடலுறவுக்கு இணங்கவேயில்லை. அதனால் கொலை செய்தேன்” என அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார்.