கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவாயம் கிராமத்தில் கணேசன் என்பவர் சக்திவேல்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு முரதியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிசுதன்(9), ஹரிஸ்னி(7) என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் குடும்ப பிரச்சினை காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த சக்திவேல் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உறவினர்களுக்கு இறப்பு செய்தி சொல்லி, உடலை அடக்கம் செய்ய முயன்றனர்.
இதற்கிடையில் சக்திவேலின் தாய் செல்வராணி தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அடக்கம் செய்யவிருந்த சக்திவேலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.