Categories
தேனி மாவட்ட செய்திகள்

உடலை மாற்றிக் கொடுத்த விவகாரம்…. முக்கிய தலைவர்கள் பங்கேற்பு…. தேனியில் பரபரப்பு….!!

தேனியிலிருக்கும் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக அனைத்திந்திய இளைஞர்கள் பெருமன்றத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டத்திலிருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சில நாளுக்கு முன்பாக பிணத்தை மாற்றி பிரேத பரிசோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தரப்பிலும், அரசு மருத்துவமனை தரப்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இச்சம்பவத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக அனைத்திந்திய இளைஞர்கள் பெருமன்றத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்தில் மாவட்டத்தின் செயலாளரான தமிழ் பெருமாள் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இதில் பல முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |