உடலுக்கு வலு சேர்க்கும் உளுந்தங் கஞ்சி யை நாம் கட்டாயம் சாப்பிட வேண்டும். அது எப்படி செய்வது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் பெருமளவு பிரச்சனையை சந்தித்து வருகின்றன. சீரற்ற மாதவிடாய், அதிக உதிரப் போக்கு போன்ற காரணங்களால் பெண்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபட கருப்பு உளுந்து கஞ்சியை ஒரு வாரம் ஒருமுறை குடித்து வந்தால் சிறந்த நன்மையைத் தரும்.
நாம் அன்றாட வாழ்வில் இட்லி, தோசை மாவு அரைப்பதற்கு உளுந்தை பயன்படுத்துகிறோம். உளுந்து கருப்பு உளுந்து, வெள்ளை உளுந்து என இரண்டு உள்ளது. பெரும்பாலும் எல்லோரும் தோல் நீக்கிய வெள்ளை உளுந்துகளையே தற்போது பயன்படுத்துகின்றன. முந்தைய காலத்தில் கருப்பு உளுந்து தான் பயன்படுத்தப்பட்டது. இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் உள்ளது. கருப்புத்தோல் உளுந்தை பயன்படுத்தினால் இட்லி, தோசை, வடை நிறம் மாறி விடுகிறது என்பதால் பலரும் இதனை பயன்படுத்த மறுக்கிறார்கள்.
எப்படி செய்வது?
இது ஒரு சத்தான ஆகாரம்
கருப்பு உளுந்து-ஒரு டம்ளர்
புழுங்கலரிசி-அரை டம்ளர்
வெந்தயம்=-ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு- 2 டேபிள் ஸ்பூன்
சீரகம்-2 டேபிள் ஸ்பூன்
ஓமம்-ஒரு டேபிள்ஸ்பூன்
சுக்கு-கால் டீஸ்பூன்
உப்பு-தேவைக்கேற்ப
கொப்பரை தேங்காய் துண்டு-5
நெய்-ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
உளுந்தை மிக்ஸியில் சேர்த்து நன்றாக பொடி செய்து, பின்னர் புழுங்கலரிசியை அதனுடன் சேர்த்து பொடி செய்து கொள்ளவேண்டும். அரிசி இல்லாமல் நொய் அரிசியும் பயன்படுத்தலாம். வரகு, சாமை, குதிரைவாலி போன்ற அரிசிகளையும் பயன்படுத்தலாம். வெந்தயம், மிளகு, சீரகம், ஓமம் அனைத்தையும் லேசாக வறுத்து பொடி செய்யவும். அரசி,உளுந்தை ஒரு அலசு அலசி கல் நீக்கி குக்கரில் தேவையான அளவு சேர்த்து குழைய வேகவிடவும். இதில் பொடித்த பொருளை சேர்த்து கல்லுப்பு, சுக்குத் தூள் ஆகியவற்றை கலக்கவும்.
இறுதியாக கொப்பரை தேங்காய் துண்டுகளை சேர்க்கவும். நெய் விட்டு இறக்கி வாரம் ஒருமுறை இதனை குடித்து வந்தால் கர்ப்பப்பை கோளாறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். மாதவிடாய் காலத்தில் பெண்கள் அதிகமான உதிரப்போக்கு காரணமாக அதிகம் படுகின்றனர். அப்படிப்பட்ட நேரத்தில் இந்த கஞ்சியை சாப்பிடுவது மிகவும் நல்லது. பெண்களுக்கு வலுசேர்க்கும் விதமாக இது உதவுகிறது. எலும்புகளை மேன்மையாக இந்த கருப்பு உளுந்து கஞ்சி பயன்படுகிறது.