Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உடல்நலக்குறைவால் அவதி…. முதியவரின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் சோழசிராமணி அடுத்துள்ள வெய்யக்காஞ்சாம் புதூர் பகுதியில் பழனியப்பன் (75) என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பழனியப்பன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக பழனியப்பனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் பழனியப்பன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து ஜோடர்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |