Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உடல்நலக்குறைவால் அவதி…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

உடல்நலக்குறைவால் அவதியடைந்த தொழிலாளி மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள அக்ரகாரம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். மார்க்கெட்டிங் ஊழியரான இவருக்கு அம்பிகா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் செந்தில்குமார் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.

இதனால் மனமுடைந்த செந்தில்குமார் வீட்டில் தனது அறையில் வைத்து மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி பூவாம்பிகா உடனடியாக செந்தில்குமாரை மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் செந்தில்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |