Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

உடல்நலக்குறைவால் ரசிகர் உயிரிழப்பு… சோகத்தில் ரசிகர்கள்… ரஜினி துக்க விசாரிப்பு…!!!

ரஜினி மறைந்த தனது ரசிகர் ஏ.பி.முத்துமணியின் மனைவிக்கு போனில் தொடர்பு கொண்டு துக்கம் விசாரித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஏ.பி.முத்துமணி. ரஜினிகாந்த்துக்காக முதல் ரசிகர் மன்றத்தை தொடங்கியவர் முத்துமணி. 2020 ஆம் வருடம் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது ரஜினி போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். இதை தொடர்ந்து அண்மையில் இவருக்கும் மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் உடல்நிலை சரியில்லாததால் உயிரிழந்தார். இச்செய்தியானது ரஜினி மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் முத்துமணி மனைவியை போனில் தொடர்பு கொண்டு ரஜினி துக்கம் விசாரித்துள்ளார். ரஜினி அவரிடம் தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 5 நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரின் இறப்பு எனக்கு மிகவும் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக வருத்தப்பட்டுள்ளார் ரஜினி. அப்போது முத்து மனைவியின் எனக்கு பத்தாவது படிக்கும் மகள் உள்ளார். கணவர் இல்லாமல் மகளை படிக்க வைப்பது கஷ்டமாக இருப்பதாக கூறியுள்ளார். அதற்கு ரஜினி நான் பார்த்துக்கொள்கிறேன். மகளை நன்றாக படிக்க வையுங்கள். எனக்கு உடல்நிலை சரியானதும் உங்களை நேரில் வந்து பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |