Categories
தேனி மாவட்ட செய்திகள்

உடல்நலம் பாதிக்கப்பட்டு…. திடீரென உயிரிழந்த கோவில் காளை…. ஊர்மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி….!!

உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த கோவில் காளை உயிரிழந்த சம்பவம் ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தேனி மாவட்டம் பூதிப்புரம் கிராமத்தில் பிரசித்திபெற்ற ஊர்காலப்பர்கோவில் உள்ளது. இந்நிலையில் இந்த கோவிலில் தலைமுறை தலைமுறையாக காளைகளுக்கு பட்டம் சூட்டி வழிபடுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 21 ஆடுகளுக்கு முன்பு ஒரு காளைக்கு பட்டம் சூட்டப்பட்டு அதே பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலுக்கு எதிரே பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கல் பண்டிகையன்று காளைக்கு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலம் நடத்தப்படும்.

மேலும் அலங்காரம் செய்யப்பட்ட காளை கம்பீரமாக நடந்து வரும்போது ஊர் மக்கள் அனைவரும் காளையை வணங்கி, அது நடந்து வரும் பாதையில் பூக்களை தூவி வரவேற்பார்கள். அதன் படி இந்த ஆண்டும் மாட்டு பொங்கலை முன்னிட்டு ஊர்வலம் நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில் கோவில் காளைக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மாட்டுப்பொங்கல் அன்று நடைபெற இருந்த ஊர்வலத்தை ரத்து செய்துள்ளனர்.

இதனைதொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த காளையின் உடல்நிலை மோசமடைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனையறிந்த ஊர் மக்கள் அனைவரும் காளையை பராமரிக்கும் இடத்தில் ஒன்றுகூடி மிகுந்த வேதனையுடன் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதற்குப்பின் உயிரிழந்த காளையை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து சென்று ஊர்காலப்பர் கோவில் வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |