Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உடல்நல குறைவால் உயிரிழந்த சிங்கம்…. மருத்துவ குழுவினர் பரிசோதனை…. சோகத்தில் பொதுமக்கள்….!!!!

உடல்நிலை குறைவு காரணமாக சிங்கம் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள வண்டலூர் பகுதியில் அறிஞர் அண்ணா உளவியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் 2 ஆயிரத்து 300 விலங்குகள்  பூங்கா ஊழியர்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  கள்ளக்குறிச்சி பூங்காவில் இருந்து கடந்த 2000-ஆம் ஆண்டு மணி என்ற ஆண் சிங்கம் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக அந்த ஆண் சிங்கத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அந்த ஆண் சிங்கம் பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்துள்ளனர். இந்த பூங்காவில் கடந்த ஜனவரி மாதத்தில் 18 வயது சிறுத்தையும், மார்ச் மாதத்தில் 13 வயது வெள்ளை புலியும், மே மாதத்தில் 18 வயது வரிக்குதிரையும் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளது. மேலும் சில நாட்களுக்கு முன்பு சாம்பார் மான், காட்டுமான்  ஆகிய விலங்குகளும் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |