திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை அருகே காட்டெருமை ஒன்று தனியார் தோட்டத்தில் இறந்து கிடந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அயனாம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது காட்டெருமை ஒன்று தொப்பசாமிமலை அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் இறந்து கிடப்பதை வனத்துறையினர் கண்டனர். உடனே அவர்கள் இதுகுறித்து அய்யலூர் அரசு கால்நடை மருத்துவமனைக்கு தகவல் அளித்தனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்நடை டாக்டர் ராஜ்குமார் மற்றும் மருத்துவ குழுவினர் காட்டெருமையின் உடலை பரிசோதித்தனர். அதன் பின் காட்டெருமையின் உடல் அங்குள்ள வனப்பகுதியில் புதைக்கப்பட்டது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்த காட்டெருமை ஆறு வயது உடையது. மேலும் இது ஆண் காட்டெருமை ஆகும். உடல்நல பாதிப்பால் அது இறந்திருக்கலாம் என்றும் கூறினர்.