Categories
தேசிய செய்திகள்

உடல்நிலை சரியில்லாத மனைவியை…. ஊசி போட்டு கொலை செய்த கணவர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உடல்நிலை சரியில்லாத மனைவியை ஊசி போட்டு கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம் ராமேஸ்வரம் கிராமத்தை சேர்ந்த மருத்துவர் சன்னேசப்பா என்பவரின் மனைவி ஷில்பா. இவர்களுக்கு கடந்த 2005ஆம் ஆண்டு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. மருத்துவரான சன்னேசப்பாவுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் வந்துள்ளது. இதனால் அவரை பல ஆண்டுகளாக அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி ஷில்பாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே அவர் கணவர் வீட்டில் வைத்து அவருக்கு வைத்தியம் பார்த்து வந்துள்ளார்.

ஒருநாள் அவருக்கு உடல் நலம் மிகவும் மோசமான நிலையில் அவருக்கு வீட்டில் ஊசி போட்டு சிகிச்சை அளித்துள்ளார். ஊசி போட்ட சிறிது நேரத்தில் ஷில்பா மயக்கமாகி கீழே விழுந்தார். பின்னர் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் அவரது கணவரை பிடித்து விசாரணை செய்தபோது, மனைவிக்கு ஊசி செலுத்தி கொன்றதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |