மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பேரணாம் பட்டை அருகே ராஜக்கள் சங்கராபுரம் கொல்லைமேடு என்ற பகுதியில் வசித்து வருபவர் பூபாலன். லாரி டிரைவரான இவருக்கு வளர்மதி என்ற மகள் உள்ளார். அவர் அழிஞ்சிக்குப்பம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். வளர்மதிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று வீட்டில் வளர்மதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அறிந்த பூபாலன் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார் . பின்னர் சப் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வளர்மதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.