Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செண்பகராமன்புதூர் பகுதியில் அருள்ஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி(38) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராணி, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல் நிலையை முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதனால் மன உளைச்சலை இருந்த ராணி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |