அன்றைய காலகட்டத்தில் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை சிறந்தது. ஆனால் இன்று நடப்பது என்னவோ வேறு. அதிலும் குறிப்பாக பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தாக்கி கொண்டிருக்கின்றன. அதற்கு நாம் தான் காரணம். நாம் எப்போதும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ நம் முன்னோர்கள் செய்ததை தொடர்ந்து பின்பற்றி வந்தால் மட்டும் போதும்.
உணவிடை நீரை பருகாதே!
கண்ணில் தூசி கசக்காதே!
கத்தி பிடித்து துள்ளாதே!
கழிக்கும் இரண்டை அடக்காதே!
கண்ட இடத்திலும் உமிழாதே!
காதை குத்தி குடையாதே!
கொதிக்கக் கொதிக்க குடிக்காதே!
நகத்தை நீட்டி வளர்க்காதே!
நாக்கை நீட்டி குதிக்காதே!
பல்லில் குச்சி குத்தாதே!
பசிக்காவிட்டால் புசிக்காதே!
பசித்தால் நேரம் கடத்தாதே!
வயிறு புடைக்க உண்ணாதே!
வாயைத் திறந்து மெல்லதே!
வில்லின் வடிவில் அமராதே!
வெற்றுத் தரையில் உறங்காதே!
இவை அனைத்தும் நாம் தொடர்ந்து கடைபிடித்தாலே போதும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.