Categories
உணவு வகைகள்

உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் நெல்லிக்காய்… ஜூஸ் ரெசிபிகள்!

நெல்லிக்கனியில் உள்ள மருத்துவக் குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்று கூறுவதுண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது. இரண்டுமே ஆரோக்கியத்திற்கு நல்லது. நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். நெல்லிக்காய் சாறு தயாரித்து பருகுவதன் மூலம் ரத்தசோகை, குடல் புண், சர்க்கரைநோய், கண் நோய்களிலிருந்து விடுபடலாம். உடலில் உள்ள புரதச்சத்தை அதிகரித்து, கொழுப்பை குறைக்கும் தன்மை நெல்லிக்காய்க்கு உள்ளது. சுவையான நெல்லிக்காய் ஜூஸ் ரெசிபிகள் தயாரிப்பு குறித்து இங்கு காண்போம்.

ஜூஸ் ரெசிபி – 1

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் – 3
புதினா – 1 கைப்பிடி

செய்முறை:

நெல்லிக்காய்யை கொட்டை நீக்கி சிறிதாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு, அதோடு புதினா இலைகளை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். இதனுடன் 1 டம்ளர் தண்ணீர்விட்டு வடிகட்டி கொள்ள வேண்டும். நீரழிவு நோய் உள்ளவர்கள் அப்படியே பருகலாம்.
கசப்பு தன்மையை போக்க 1 தேக்கரண்டி தேன் சேர்த்தும் அருந்தலாம்.

ஜூஸ் ரெசிபி – 2

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் – 2
சிறிய துண்டு இஞ்சி – 1
கல் உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை:

மேலே சொன்ன பொருட்களை நன்றாக அரைத்து வடிகட்டி உங்கள் சுவைக்குத் தகுந்தவாறு தண்ணீர் சேர்த்து பருக வேண்டும்.

ஜூஸ் ரெசிபி – 3

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
சீரகம் – ½ ஸ்பூன்
மிளகு – `/4 ஸ்பூன்
எலுமிச்சை – அரை பழம்

செய்முறை :

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் குளிர்காலத்திற்கு ஏற்ற பொருட்கள். நெல்லிக்காய்களை சிறிய துண்டுகளாக வெட்டி விதைகளை நீக்கி வைத்து கொள்ள வேண்டும். இதனுடன் சிறிய துண்டு இஞ்சி , சீரகம், மிளகு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும். இதை வடிகட்டி அதனுடன் எலுமிச்சை கலந்து பருகலாம். இதை சேர்த்து வைத்து அவ்வப்போது பருகிக்கொள்ளலாம்.

Categories

Tech |