Categories
தேசிய செய்திகள்

உடல் ஆரோக்கியமா இருக்கணும்னு…. 95 வயதிலும் உழைக்கும் நபர்…. வைரலாகும் வீடியோ…!!

உத்திரபிரதேசத்தில் 98 வயதிலும் தன்னம்பிக்கையுடன்  உழைத்து வாழும் நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் விஜய் பால்சிங் (98 வயது). இவருக்கு பெரிய குடும்பமே இருக்கின்றது. ஆனால் இவர் தினமும் வேக வைத்த சுண்டல் மசாலா வியாபாரம் செய்து வருகின்றார். அதுமட்டுமின்றி வேலை செய்யாமல் இருந்தால் என் உடல் விறைத்துவிடும் என்றும் நான் தொடர்ந்து வேலை செய்தால் மட்டுமே 12 மாதங்களுக்கும் ஆரோக்கியமாக இருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. மேலும் இந்த வீடியோவை அம்மாநில முதலமைச்சரும் கவனித்துள்ளார். இதனால் தனது 95 வயதிலும் தன்னம்பிக்கையுடன் உழைத்து வாழும் அந்த நபரை உத்திரப்பிரதேச அரசு கவுரவிக்கும் விதமாக அவருக்கு தனியாக குடும்ப அட்டை , ரூ. 11000 பணம் மற்றும் வாக்கிங் ஸ்டிக் முதலியவற்றை மாவட்ட நீதிவான் வழங்கியுள்ளார்.

 

Categories

Tech |