Categories
சினிமா தமிழ் சினிமா

உடல் உறுப்பு முழுவதையும் தானம் செய்த பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா…. நல்ல மனசுக்கு குவியும் பாராட்டு….!!!!!

அர்ஜுன் ரெட்டி திரைப்படம் வாயிலாக பிரபலமான விஜய் தேவரகொண்டா தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக உள்ளார். இவர் தமிழில் நோட்டா திரைப்படத்தில் நடித்து உள்ளார். மேலும் அவரது டியர் காமரேட் தெலுங்கு திரைப்படமும் தமிழில் வந்தது. இவ்வாறு குறைந்த திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல பெயர் எடுத்திருக்கிறார். எனினும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அண்மையில் பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகிய லைகர் படம் படு தோல்வியடைந்து அவருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

இதன் காரணமாக அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வீட்டிலேயே முடங்கியிருந்தார். இந்நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்ற குழந்தைககள் மருந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா தன் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்தார். இதுகுறித்து விஜய் தேவரகொண்டா கூறியதாவது, ”பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் அரசின் உதவியாலும், பொதுமக்கள் நன்கொடையாலும் நடப்பதை அறிந்தேன்.

பலர் மனிதாபிமான அடிப்படையில் உறுப்பு தானம் செய்கின்றனர். பொது மக்களுக்கு உடல் உறுப்புகள் அதிகம் தேவைப்படும் நிலையில், அதுகுறித்த விழிப்புணர்வு இல்லை. உடல் உறுப்புகளை வீணாக்ககூடாது. நான் என் அனைத்து உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதியளிக்கிறேன்”என்று கூறினார். இதனால் அவரை வலைத்தளத்தில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |