Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் உள்ளுறுபை…சேதப்படுத்தும் நச்சு பொருட்கள்…வழி என்ன?

உடலில் சேரும் நச்சு பொருட்களை வெளியேற்ற அருமையான மருந்தை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருப்பதற்கு உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

புகைப்பிடித்தல், மது அருந்துதல், மாசுபட்ட குடிநீர், கலப்பட உணவினால் உடலில் சேரும் நச்சு பொருட்களை அதிரடியாக வெளியேற்றிட அருமையான மருந்துகள் இருக்கின்றன.

உடலை மேம்படுத்த அகத்திக்கீரை மற்றும் பனங்கற்கண்டை, சூடான பாலில் சேர்த்து பருகலாம்.

கற்பூரவள்ளி இலை, வேப்பம் இலை சேர்த்து நன்கு அரைத்து சுண்டைக்காயளவு கொடுத்து வர வயிற்றில் உருவாகும் நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறி விடும்.

மா, பலா, வாழை ஆகிய கனிகளையும் சாப்பிட்டு ஜீரணம் ஆகவில்லை என்றால், அதனால் மந்தம், வயிற்றுவலி, ஏப்பம் ஆகியவை ஏற்படும். அதனை போக்க துவரம்பருப்பை வேக வைத்து வடித்த நீரில் மிளகும், பூண்டும் தட்டிப் போட்டு ரசம் வைத்து சாப்பிட தகுந்த நிவாரணம் பெறலாம்.

50 கிராம் கோரைக்கிழங்கு சூரணம், 10 கிராம் கிச்சிலி கிழங்கு சூரணம் கலந்து வைத்துக்கொண்டு தினமும் குளிக்கும்போது சோப்புக்கு பதில் இந்த கலவையை தேய்த்து குளித்து வர உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம் தீருவதுடன் தேமல், சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.

நம்முடைய சுற்றுச்சூழலில் இருக்கும் அனைத்து வகையான கிருமிகள் மற்றும் குப்பைகள் என சகல நச்சுக்களையும் விரட்ட வேண்டினால் நாம் நீண்டஆயுளோடு, மகிழ்ச்சியாக வாழ முடியும்.
அதற்கு ஏற்றவாறு நாம் உண்ணும் உணவில் கவனம் தேவை.

Categories

Tech |