வெள்ளரிக்காய் மோர், உடல் உஷ்ணத்தை குறைக்கிறது. இதில் சூப்பரான வெள்ளரிக்காய் மோர் தயாரிப்பது எப்படி என்பதை பற்றி காணலாம்:
வெண்ணெய் அகற்றிய தயிர் – 200 மில்லி
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
வெள்ளரிக்காய் – 1
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 400 மில்லி
செய்முறை:
முதலில் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். பின் வெள்ளரிக்காயின் தோலை நீக்கி, அதை துருவி வைக்கவும். தொடர்ந்து, வெண்ணெய் நீக்கிய தயிருடன், தண்னீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழை, துருவிய வெள்ளரிக்காய், தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
இப்போது சுவையான வெள்ளரிக்காய் மோர் தயார். இதனை புளிக்கும் முன்பே சுவைத்தால் அருமையாக இருக்கும்.