நடைப்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்ததாக குஷ்பு தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான சின்னத்தம்பி படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் குஷ்பூ. இதை தொடர்ந்து இவர் ரஜினி, கமல், கார்த்தி, மோகன் போன்ற பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் கடந்த சில மாதங்களாக நடிகை குஷ்பூ தனது உடல் எடையை குறைக்க தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.
https://www.instagram.com/p/CUXnoFagsZt/?utm_source=ig_embed&ig_rid=18006ad3-24b7-4787-bcf6-4245a06d679a
சமீபத்தில் மிகவும் ஸ்லிம்மாக மாறிய புகைப்படங்களை குஷ்பூ தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இதையடுத்து அவரிடம் ரசிகர்கள் ‘உடல் எடையை எப்படி குறைத்தீர்கள்?’ என கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் நடைப்பயிற்சி செய்ததன் மூலம் உடல் எடையை குறைத்ததாக குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.