ஒரு நாளைக்கு இவ்ளோ தண்ணீர் குடிப்பதன் மூலம் நம் உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இயலும்.
நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவனின் மொழிக்கேற்ப தண்ணீர் இன்றி இவ்வுலகில் எவ்வுயிரும் வாழ இயலாது. அத்தியாவசியமான இந்த நீரில் பஞ்சம் ஏற்படுமேயானால் அதன் விளைவாக மூன்றாம் உலகப் போர் நிகழும் என்றும் நீரின் தேவையை குறித்து கூறுகின்றனர். நீரற்ற உலகினை ஒருநாளும் கற்பனைகூட செய்து பார்க்க இயலாது. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அத்தியாவசியமான ஒன்றாக நீரானது விளங்குகிறது.
இந்த நீரினை பயன்படுத்தியே நம் உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும். தண்ணீரை சரியான முறையில் நம் உடலுக்கு அருந்தினால் அதுவே நம்மை அனைத்து வகையான பாதிப்புகளில் இருந்தும் பாதுகாத்து வரும் என்றும் அறியப்படுகிறது. உடலில் நீரின் அளவு குறையுமே ஆனால் நாம் பலவிதமான நோய்களுக்கு ஆட்கொள்ள படுகிறோம்.
மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 8 டம்ளர் அல்லது 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமானது. இரண்டு லிட்டருக்கு மேல் குடித்தாலும் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை வலுப்படுத்தி தரும். ஆனால் மருத்துவர்கள் பரிந்துரையின்படி நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ என்பதைப் பொறுத்தே நமது ஆரோக்கியமானது தீர்மானிக்கப்படும்.
நம் உடலின் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் தண்ணீர் உதவுகிறது. ஒரு மனிதன் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது முழுக்க முழுக்க அவர்களின் உடல் எடை சார்ந்தே அமைகிறது. உடலின் எடை அதிகமாக இருக்கும் பட்சத்தில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது. தண்ணீர் உடலுக்கு ஏற்றவாறு குடித்து வருவதுஉடல் ஆரோக்கியமாகவும், உடலின் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.