Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

உடல் எடையை குறைக்கணுமா?… ட்ரை பண்ணுங்க… இதோ ஒரு அற்புத சூப்…!!!

குடைமிளகாயில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால் அதனை வைத்து செய்யப்படும் சூப் உடல் எடையை குறைக்க கட்டாயம் உதவும்.

தேவையான பொருட்கள்:

சிவப்பு குடைமிளகாய் – 2

லக் சா பேஸ்ட் – 150 கிராம்

மிளகு – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

வெங்காயம் – 100 கிராம்

பூண்டு- 25 கிராம்

சமையல் கிரீம் – 200 மிலி

தேங்காய் பால் பவுடர் – 200 கிராம்

வெண்ணெய் – சிறிதளவு

செய்முறை:

வெங்காயம் மற்றும் பூண்டை சிறியதாக பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். குடைமிளகாய்களை உப்பு, மிளகு மற்றும் க்ரீம் ஆகியவற்றால் சீசன் செய்து, பத்து நிமிடங்கள் பேக் செய்ய வேண்டும். அதன் தோல் மற்றும் விதைகளை அகற்றி விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதன்பிறகு சூட் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து, அது உருகியதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அதில் அரைத்த குடமிளகாயை சேர்த்து, அதனுடன் லக்சா பேஸ்ட், தேங்காய் பால் பவுடர் ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து இறக்கி சூடாக பரிமாறவும்.

நன்மைகள்:

குடைமிளகாயில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதாலும் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் ஆகியவை குறைவாக இருப்பதாலும் உடல் எடையை குறைக்க நிச்சயம் உதவும்.

Categories

Tech |