படத்திற்காக உடல் எடையை அதிகரித்த நடிகை அனுஷ்கா தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகை அனுஷ்கா கதாநாயகியாகவும் ,கம்பீரமான தோற்றங்களிலும் சிறப்பாக நடித்து ரசிகர் கூட்டத்தை கவர்ந்தவர் . இவர் நடிப்பில் வெளியான அருந்ததி, பாகமதி, ருத்ரமாதேவி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்தார் . பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு வர போராடி வந்தார். இதனிடையே பாகுபலி படத்திலும் அனுஷ்காவின் தோற்றத்தை ஒல்லியாக காண்பிக்க கிராபிக்ஸ் பணிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவின் 50வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ள அனுஷ்காவின் புகைப்படம் வெளியாகியுள்ளது . அதில் நடிகை அனுஷ்கா மீண்டும் பழையபடி ஒல்லியான தோற்றத்திற்கு மாறியுள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர் .