Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறிய பாவனா… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை பாவனா உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகை பாவனா சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து இவர் தீபாவளி, ஜெயம் கொண்டான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். கடைசியாக இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான அசல் படத்தில் நடித்திருந்தார். இதன் பின் தமிழ் படங்களில் நடிக்காத பாவனா மலையாளம் மற்றும் கன்னட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

bhavana-cinemapettai

மேலும் விஜய் சேதுபதி- திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் கன்னட ரீமேக்கான 99 படத்தில் நடிகை பாவனா ஜானு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாவனா கடுமையாக உடற்பயிற்சி செய்து ஸ்லிம்மாக மாறிய புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |