நடிகை பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பிரியா பவானி சங்கர் . இதையடுத்து இவர் மேயாத மான் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். இதைதொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம், மாபியா, மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார். மேலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது .
தற்போது இவர் ஓமண பெண்ணே, குருதி ஆட்டம், பத்து தல, AV33 உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகை பிரியா பவானி சங்கர் உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறியுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.