நடிகை பிரியாமணி உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியாமணி. இந்தப் படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதை கவர்ந்தார். இதைத் தொடர்ந்து இவர் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் இவர் நடிப்பில் வெளியான படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை .
இதையடுத்து திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலான பிரியாமணி பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணிபுரிந்து வந்தார் . இந்நிலையில் நடிகை பிரியாமணி உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.