நடிகை கிருத்திகா உடல் எடையை குறைத்தது குறித்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரை சீரியல்களில் தன்னுடைய 15 வயதிலிருந்து தற்போது வரை தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் நடிகை கிருத்திகா. இவர் பத்தாம் வகுப்பு படிக்கும்போது சன் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிய மெட்டி ஒலி சீரியலில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். இதை தொடர்ந்து இவர் செல்லமே, முந்தானை முடிச்சு, ஆனந்தம் போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார். தற்போது நடிகை கிருத்திகா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியலில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் .
https://www.instagram.com/p/COxVgtDBHkx/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
இந்நிலையில் கிருத்திகா 2012 -லிருந்து 2021-ஆம் ஆண்டு வரை தன்னுடைய உடல் எடையை குறைத்தது குறித்த வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கிருத்திகா தனது உடல் எடையை 86 கிலோவில் இருந்து 63 கிலோவாக குறைத்து ஸ்லிம்மாக மாறிய இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.