Categories
லைப் ஸ்டைல்

உடல் எடையை 2 மடங்கு வேகத்தில் குறைக்கும் கிராம்பு டீ… இனிமே தினமும் இத குடிங்க…!!!

உங்களின் உடல் எடையை இரண்டு மடங்கு வேகத்தில் குறைக்கும் கிராம் டீயை தினமும் குடிப்பது மிகவும் நல்லது.

தற்போதைய காலகட்டத்தில் அனைவருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது உடல் எடையை குறைப்பது. அதற்கு அவர்கள் பல பயிற்சிகளை செய்கிறார்கள். ஆனால் சிலருக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை. உடல் எடையை குறைக்க பல இயற்கை மருத்துவ பொருட்கள் உதவியாக இருக்கின்றன. அதில் கிராம்பும் ஒன்று. கிராம்பு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதிகரித்த உடல் எடையை குறைக்க உதவும். இதில் டீ போட்டு குடித்தால் இன்னும் பல நன்மைகள் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:
தண்ணீர் – 2கப்
கிராம்பு- 5
பட்டை- 1/2 இன்ச்
இஞ்சி- 1/2 இன்ச்
வெல்லம்- சுவைக்கேற்ப
எலுமிச்சை- 1/2

செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதன்பிறகு பாத்திரத்தை இறக்கி அதில் கிராம்பு மற்றும் பட்டை சேர்த்து, இஞ்சியை தட்டிப்போட்டு மூடி வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு அந்த நீரை வடிகட்டி அதில் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால் கிராம்பு டீ தயார்.

இதில் கிடைக்கும் நன்மைகள்:
இது செரிமானத்தை அதிகரிக்க உதவும். கிராம்பில் உள்ள உட்பொருட்கள் செரிமான செயல்முறையை ஊக்குவிக்கிறது. ஒருவரது உடலில் செரிமானம் சிறப்பாக நடந்தால் அது அதிகப்படியான உடல் எடையை குறைக்க உதவும். கிராம்பில் ஆன்டிசெப்டிக் பண்புகள் அதிகம் உள்ளன. இவை சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கும். உடலில் இருந்து நச்சுகளை நீக்கவும். ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கும். இந்த டீ நெஞ்சு எரிச்சலுக்கும் நெஞ்சிலுள்ள சளியை வெளியேற்ற நிவாரணமளிக்கும். இந்த டீ குடித்தால் அது வயதிலிருந்து பாக்டீரியாக்களை நீக்க உதவுகிறது. பல் சம்பந்தமான பிரச்சினையில் இருந்து உடனடி நிவாரணம் காணலாம்.

பக்க விளைவுகள்:
இதனை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை குடிப்பது நல்லது. அதற்குமேல் குடிக்கும் போது இரைப்பை குடலில் அழுத்தம் அதிகமாக கொடுக்கப்பட்டு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தசை வலி மற்றும் சோர்வை சந்திக்க நேரிடும். கர்ப்பிணிகள் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கிராம்பு டீ குடிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அதிகமாக குடித்தால் அது குழந்தைக்கு தீங்கை விளைவிக்கும்.

Categories

Tech |