Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் எடை அதிகமா இருக்கா? கவலை எதற்கு…இதை try பண்ணுங்க…!!

சீரகத்தின் பயன்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

சீரகம், அழகு மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.

தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து காலையில், வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுக்கு மிகவும் நல்லது. வயிற்றுவலிக்கு தீர்வு தரும். உடல் எடை அதிகம் உள்ளவர்கள் இதை குடித்து வந்தால் எளிதில் பலன் கிடைக்கும்.

கர்ப்பிணி பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் செரிமானத்தை மேம்படுத்த உதவும் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளை தூண்டும் தன்மை கொண்டது.

சீரகத் தண்ணீர் குடிப்பதால் செரிமான பிரச்சனைக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். சீரகத்தில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்க வேண்டுமானால், சீரக நீர் குடிக்க வேண்டியது அவசியம். உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தும்.

மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழி வகுக்கும். சுவாச கட்டமைப்புக்கு நன்மை சேர்க்கும். சளியை குணப்படுத்த உதவுகிறது.

Categories

Tech |